அரைகுறை ஆங்கிலத்தில் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்திய போதை ஆசாமி...

கடலூரில் மது போதையில் வாகனம் ஓட்டி வந்த நபர், அரைகுறை ஆங்கிலத்தில் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்திய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அரைகுறை ஆங்கிலத்தில் போலீசாரிடம் வாக்குவாதம் நடத்திய போதை ஆசாமி...

 கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே வாகன ஓட்டி ஒருவர், போலீசார் நிறுத்தியும், நிற்காமல் சென்றுள்ளார். இதனையடுத்து துரத்தி சென்று பிடித்த போது, அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அரைகுறை ஆங்கிலத்தில் உளறி தள்ளிய அந்த நபர், பதில் சொல்லுங்க என்று போலீசாரை வம்புக்கு இழுத்த காட்சி, அங்கிருந்தோரை நகைப்புக்குள்ளாக்கியது.