காட்டுக்கு ராஜாவான Bear Grylls பிறந்ததினம் இன்று!

இங்கிலாந்தை சேர்ந்த புகழ்பெற்ற தொலைக்காட்சி தொகுப்பாளரான Bear Grylls இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

காட்டுக்கு ராஜாவான Bear Grylls பிறந்ததினம் இன்று!

சர்வதேசப்புகழ்பெற்ற சாகசப்பயணங்களின் நாயகன், எழுத்தாளர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர், இங்கிலாந்தின் ஒரு பகுதியான Northern Ireland ஐ சேர்ந்த Bear Grylls என அழைக்கப்படும்
Edward Michael Grylls இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

சுமார் 23 வயதில் எவரெஸ்ட் சிகரமேறி சாதனைபடைத்த இவர் உலகெங்கும்  உள்ள மலைகள், அருவிகள், காடுகள், ஆபத்தான நீர்நிலைகள், பாலைவனங்கள் மற்றும் கடல்களில் சாகசப்பயணங்கள் மற்றும் ஆய்வுகள் செய்துள்ளார், இவரின்  புகழ்பெற்ற சாகசப்பயணங்களை National Geographic, Discovery, History போன்ற பல தொலைக்காட்சிகளில் காணலாம்.  

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஐ  தனது சாகச நிகழ்ச்சிப்பயணத்திற்கு இவர் அழைத்துச்சென்றுள்ளார்.