போலீஸ் கிட்ட போய் சொல்லு...நா இங்க தா இருப்பேன்னு...ஜாமினில் வெளிவந்த வாலிபர் போலீசுக்கு சவால்...வைரலாகும் வீடியோ.!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா வழக்கில் கைதாகி, ஜாமினில் வெளிவந்த வாலிபர் போலீசாருக்கு சவால் விட்ட வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.  

போலீஸ் கிட்ட போய் சொல்லு...நா இங்க தா இருப்பேன்னு...ஜாமினில் வெளிவந்த வாலிபர் போலீசுக்கு சவால்...வைரலாகும் வீடியோ.!!

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த முல்லை நகரை சேர்ந்தவர் தான் பிரின்ஸ். இவர் கடந்த 19 ஆம் தேதி கஞ்சா வழக்கில் விருத்தாசலம் போலீசார் கைது செய்யப்பட்டார். அதன்பின்னர் ஜாமினில் வெளிவந்ததாக சொல்லப்படுகிறது.

இந்தநிலையில் மாரி திரைப்படத்தில் வரும் வசனம் போன்று போலீஸ் கிட்ட போய் சொல்லு...நா இங்க தா இருப்பேன்னு என்று பேசி போலீஸுக்கு சவால் விடுவது போன்ற வீடியோ ஒன்றை ஜாமினில் வெளிவந்த பிரின்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வலைதளத்தில் பரவி வைரலாகி வருகிறது.