கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்...! சிலிர்க்க வைக்கும் வீடியோ...!

கடற்கரை வழியாக பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதனை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

கடற்கரையில் விழுந்து விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர்...! சிலிர்க்க வைக்கும் வீடியோ...!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை(19.2.2022) அன்று மியாமி கடற்கரையில் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

புளோரிடா மாகாணத்தின் மியாமி கடற்கரை பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பொழுதுபோக்கிற்கான இடமாக உள்ளது. அதுபோன்றோரு சூழலில் தான் அந்த கடற்கரை வழியாக பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதனை கண்ட அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

அந்த விபத்தில் நல்லவேளையாக உயிரிழப்போ அல்லது பெரிய காயங்களோ ஏற்படாமல் தப்பித்தனர். இருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். தற்போது ஹெலிகாப்டர் கடலில் விழும் வீடியோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்.அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.