ஒமிக்ரான் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளம் சிறார்கள்- மருத்துவர்கள் கவலை

ஒமிக்ரான் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஒமிக்ரான் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜார்ஜியாவில், ஒமிக்ரான் பாதித்த குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஜார்ஜியா நாட்டிலும் 5 வயதுக்கு மேலானவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டு வருகிறது. ஆனால் அங்கு ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில்,  இளம் சிறார்களே தொற்றுக்கு ஆளாகி, கூட்டம் கூட்டமாக அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாகவும், இதனால் தற்போது ஜார்ஜியாவில் ஒமிக்ரான் பாதிப்பு டெல்டா பாதிப்பு எண்ணிக் கையை நெருங்கியிருப்பதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.