தமிழ் திரை உலக பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்ட மிக பிரமாண்டமான திருமணம்...!

சென்னையில் நடைபெற்ற பிரமாண்டமான திருமணம்

தமிழ் திரை உலக பிரபல நட்சத்திரங்கள்  கலந்து கொண்ட மிக பிரமாண்டமான திருமணம்...!

தமிழ் திரை உலக பிரபல நட்சத்திரங்களான ரஜினி, கமல், பிரபு கலந்து கொண்ட மிக பிரமாண்டமான திருமணம்.

சன் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நிறுவனர் ராஜேந்திரன் ஐ.ஏ.எஸ்ஸின் மகன் சரணுக்கும், பிரபல தயாரிப்பாளர், விநியோகஸ்தகர், திரையரங்க அதிபர், சினிமா பைனான்சியர் மற்றும் வலிமை திரைப்படத்தின் தமிழக விநியோகஸ்தகர் அன்புசெழியனின் மகள் சுஷ்மிதாவுக்கும் கடந்த  திங்கட்கிழமை அன்று திருமணம் நடந்தது. இந்த திருமணத்தில் தமிழ் திரை உலக பிரபல நட்சத்த்திரங்களான ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அன்புசெழியனின் மகள் சுஷ்மிதா சென்னை எத்திராஜ் கல்லூரியில் உளவியல் பாடத்தில் இளநிலை பட்டமும், அதைத் தொடர்ந்து எம்பிஏ பட்டமும் பெற்றிருக்கிறார்.இருபத்தி ஐந்தே வயதில் ஐம்பதுக்கும் மேற்பட்ட திரை அரங்குகளை நிர்வகித்து வருகிறார். குடிமை பணிகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் நிறுவனம் சன் ஐஏஎஸ் அகாடமி. இந்த அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன்  ஐ.ஏ.எஸ்ஸின் மகன் சரண் அந்த நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார்.இவர்களது திருமணம் கடந்த பிப்ரவரி இருபத்தி ஒன்று அன்று சென்னையில் நடந்தது. 

இந்த திருமணத்தில் தமிழ் திரை உலக பிரபல மூத்த நட்சத்திரங்களான ரஜினி, கமல், பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இவர்கள் பங்கு பெற்ற இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியான நிலையில் அந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.