தற்கொலை செய்து கொள்ள அனுமதி வழங்குமாறு வழக்கறிஞர் எழுதிய கடிதம் !!
தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக அனுமதி அளிக்குமாறு வழக்கறிஞர் ஒருவர் பிரதமர் உள்ளிட்ட அனைத்து நாடளுமன்ற தலைவர்களுக்கும் கடிதம் எழுதிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்வதற்காக நாடாளுமன்றம் அனுமதி அளிக்குமாறு BAW.அபேவர்தன(BAW Abeywardena) என்ற வழக்கறிஞர் ஒருவர் கடிதம் எழுதி அதனை அரசவைத் தலைவர் , பிரதமர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பியுள்ளார்.
தான் சேவையாற்றிய காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவில் இருந்து எவ்வித காரணமும் இன்றி தன்னை பதவி நீக்கியுள்ளதால், மக்களின் கல்விகற்ற இருணை செலுத்த முடியாமல் போனதற்காக தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாக சட்டத்தரணி அவர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இருணை செலுத்த இயலாமையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவதாக அவரின் தொனிப்பொருளின் கீழ் எழுதப்பட்டுள்ள இந்த கடிதமானது சபாநாயகர் உள்ளிட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தனது சிறு வயது முதல் உயர்தரம் வரையிலும், பின்னர் பல்கலைக்கழகங்களிலும் கல்வி கற்றதன் மூலம் தான் இந்நாட்டு மக்களுக்கு பாரியளவில் கடன்பட்டிருப்பதாக வழக்கறிஞர் BAW அபேவர்தன தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.