குளிர்பானத்தில் பல்லி - பிரபல உணவக கிளைக்கு சீல் வைப்பு!

குளிர்பானத்தில் பல்லி - பிரபல உணவக கிளைக்கு சீல் வைப்பு!

குளிர்பானத்தில் பல்லி இருந்ததை தொடர்ந்து அகமதாபாத்தில் உள்ள பிரபல உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான பிரபல உணவு சங்கிலி நிறுவனம் தான் மெக்டொனால்டு. இந்தியாவில் அனைத்து முக்கிய நகரங்களிலும் இந்த  உணவக கிளைகள் அமைந்துள்ளன.

இந்நிலையில் அகமதாபாத்தில் வாடிக்கையாளருக்கு வழங்கப்பட்ட குளிர்பானத்தில் பல்லி கண்டுபிடிக்கப்பட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. இதன் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானதை தொடர்ந்து உணவகத்திற்கு அகமதாபாத் மாநகராட்சி சீல் வைத்துள்ளது.