வீட்டிலேயே மினி பார்.. கையும் களவுமாக பிடித்த போலீசார்..!

வீட்டிலேயே மினி பார்.. கையும் களவுமாக பிடித்த போலீசார்..!

சென்னையில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வீட்டில் இருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்புடைய வெளிநாட்டு மதுபானங்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.


மூட்டை மூட்டையாக பாட்டில்கள் :

சென்னை : முகப்பேர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஜெய் சிங்க் என்பவர் தனது  வீட்டில் ஒரு மினி பார் செட்டப் வைத்திருப்பது சோதனையில்  தெரியவந்துள்ளது.இவருக்கு வயது 62,மேலும் இவர் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.இவரது வீட்டில் இருந்து மூட்டை மூட்டையாக மதுபான பாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் தெரிந்து கொள்ள :https://malaimurasu.com/admin/add-post?type=article

பாட்டில்கள் பறிமுதல் :

டாஸ்மாக்கில் விடுமுறை நாட்களில் கூட சட்ட விரோதமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாருக்கு தொடர்ச்சியாக புகார்கள் குவிந்தன.அப்புகாரின் அடிப்படையில் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீட்டில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் சோதனை நடத்திய பொது  ஜெய் சிங்க் வீட்டினுள் ஒரு மினி பார் செட்டப் வைத்து மதுபான விற்பனை நடைபெறுவது போலீசாருக்கு தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்து சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 27 வெளிநாட்டு மதுபான பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் தெரிந்து கொள்ள:https://malaimurasu.com/Did-Artemis-fail-again-for-the-third-time

அரசு அதிகாரி கைது :

 போலீசார் மதுபான விற்பனையில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெய் சிங்கை கைது செய்து பின் ஜாமினில் விடுவித்தனர். இந்நிலையில் மதுபான பாட்டில்களை அந்த வீட்டில் இருந்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் மூட்டை மூட்டையாக பறிமுதல் செய்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மக்கள் மத்தியில் அரசு அதிகாரிகளின் மேல் ஒரு மன கசப்பு ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட ஜெய் சிங் ஓய்வுபெற்ற அரசு அதிகாரியாக இருந்து கொண்டு இவ்வாறான சட்ட விரோத செயலில் ஈடுபடுவது தண்டனை கூறிய குற்றமாகும்.