நொய்டா: குடியிருப்பு சங்கத் தேர்தல்.. சூடுபிடித்த களம்.. குடுமிப்புடி சண்டையால் பரபரப்பு..!

ஆதரவு திரட்ட சென்ற இரு தரப்பினரிடையே ஏற்பட்ட சண்டை..!

நொய்டா: குடியிருப்பு சங்கத் தேர்தல்.. சூடுபிடித்த களம்.. குடுமிப்புடி சண்டையால் பரபரப்பு..!

தேர்தல் ஒரு போர் களம்:

தேர்தல் என்பது ஒரு போர் களம் தான். அதற்காக இந்த அளவுக்கு செல்லுமா? என அதிர்ச்சியடைய வைக்கிறது உத்திரபிரதேசத்தில் நடந்துள்ள ஒரு சம்பவம். என்ன தேர்தல்? நாடாளுமன்றா தேர்தலா? இல்லை.. சட்டமன்றமா? இல்லை.. மாநகராட்சியா? இல்லை.. சரி உள்ளாட்சியா? இல்லவே இல்லை.. 

குடுமிப்பிடி சண்டை:

அப்படியென்றால்?.. இந்த களேபரமும், போர் களமும் குடியிருப்பு சங்கத் தேர்தலுக்காகத் தான். ஆம். உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் அடுக்குமாடி குடியிருப்பு சங்க தேர்தலில் போட்டியிடும் இரு தரப்பினர் இடையே நடைபெற்ற குடுமிப்பிடி சண்டை தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆதரவு திரட்டுவதில் சச்சரவு:

நொய்டா ஹைட் பார்க் சொசைட்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சங்க தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் போட்டியிடும் இரு தரப்பினர் குடியிருப்புவாசிகளுடன் ஆதரவு திரட்டியபோது, அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

குடியிருப்பு காவலாளிகள் கைது:

இதில் பெண்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கி, தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டுள்ளனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ள போலீசார், குடியிருப்பு காவலாளி இருவரை கைது செய்துள்ளனர்.