நானும் ரொனால்டோவும் ஒன்னு...... பீர் பாட்டிலை தள்ளி வைத்த போக்போ

ரொனால்டோவை தொடர்ந்து பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் போக்போவும் பீர்பாட்டிலை நகர்த்தி வைத்த வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப்பின்16-வது தொடருக்கான லீக் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. நேற்று நடைபெற்ற போட்டிக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது, மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ-கோலா பாட்டில்களை ரொனால்டோ தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்துக் காட்டினார். இந்த நிகழ்வு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதனால், கோகோ-கோலா குளிர்பான நிறுவனத்திற்கு சுமார் 29 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.

இந்த நிலையில், ரொனால்டோ போன்றே மான்செஸ்டர் யுனைடெட் கிளப்பில் விளையாடும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் போக்போ ஒரு தரமான சம்பவத்தை செய்துள்ளார். அதாவது, அவரும் ரொனால்டோ போன்றே ஒரு போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசிய போது, அவருக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த ஒரு பீர் பாட்டிலை அகற்றினார். இந்த வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பெரும் பேசுபொருளாகியுள்ளது.

https://www.youtube.com/watch?v=PTqYMan7aRI