புதிய ராணுவ சீருடையில் களமிறங்கிய வீரர்கள் - வைரலாகும் புகைப்படம்!

ராணுவத் தளபதி நரவனே புதிய ராணுவ சீருடை அணிந்து சென்றார்.

புதிய ராணுவ சீருடையில் களமிறங்கிய வீரர்கள் - வைரலாகும் புகைப்படம்!

இந்திய ராணுவம் தனது வீரர்களுக்கு அதிக வசதி மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை வாய்ந்த வகையில் புதிய சீருடை மாற்றப்பட இருப்பதாக அறிவித்து இருந்தது.இதனை தொடர்ந்து ஜனவரி 15 ஆம் தேதி நடைபெற்ற ராணுவ தின அணிவகுப்பில் இந்த புதிய சீருடையை ராணுவ வீரர்கள் முதல்முறையாக அணிந்து பங்கேற்றனர். பல்வேறு நாடுகளின் ராணுவ சீருடைகளை ஆய்வு செய்து, விரிவான ஆலோசனைக்கு பிறகு இந்த சீருடை இறுதி செய்யப்பட்டுள்ளது. இது, மிகவும் நீடித்து உழைக்கக்கூடியது. கோடை காலத்திலும், குளிர் காலத்திலும் அணிந்து கொள்ள உகந்ததாக இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

ராணுவ வீரர்கள் பணியாற்றும் இடம், அங்குள்ள வானிலை ஆகியவற்றை கருத்திற்கொண்டு, சீருடை வடிவமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்பட்டுள்ளது. தற்போது இந்திய இராணுவத் தளபதியான ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, கிழக்குக் கட்டளைப் பகுதிக்கு அண்மையில் பயணம் செய்துள்ளார்.அந்த பயணத்திற்கு அவர் புதியதாக அறிவிக்கப்பட்ட ராணுவ சீருடையை அணிந்து சென்றுள்ளார். அவருடன் அதிகாரிகளும் புதிய சீருடையை அணிந்து சென்றனர்.தற்போது இந்த புகைப்படங்கள் பெரிதும் வைரலாக்கப்பட்டு வருகிறது.