வாடகைக்கு வீடு பார்க்க சென்ற இடத்தில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி... உரிமையாளர் விரட்டியதால் ஓட்டம்!

வாடகைக்கு வீடு பார்க்க சென்ற இடத்தில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி... உரிமையாளர் விரட்டியதால் ஓட்டம்!

தெலங்கான மாநிலத்தில் வாடகைக்கு வீடு பார்க்க சென்று அடுத்தவர் வீட்டில் ரொமான்ஸ் செய்த காதல் ஜோடி, வீட்டு உரிமையாளா் பார்த்துவிட்டதால்  ஓட்டம் பிடித்த காட்சி வெளியாகி வைரலாகி வருகிறது.

ஹைதராபாத் எஸ். ஆர். நகர் பகுதியில் வாடகை வீடு பார்ப்பதற்க்காக ஒரு இளம் காதல் ஜோடி வந்துள்ளனா். அவர்களிடம் வீட்டை பார்த்துவிட்டு வரும்படி வீட்டு உரிமையாளர் சாவி கொடுத்து அனுப்பியுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த இளம் ஜோடி திரும்பி வராததால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அந்த இளம் ஜோடி வீட்டுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அந்த இளம் ஜோடியை அங்கிருந்து விரட்டியடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.