பின் சீட்டில் இருந்து வந்த கை... சரமாரி குத்து..! சிங்கப்பெண்ணிற்கு குவியும் வாழ்த்து..!

சென்னை அருகே ஓடும் பேருந்தில் பேருந்தின் பின் சீட்டில் இருந்து கையை நீட்டி பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை சேப்டி பின்னால் குத்தியதோடு, அவரை வீடியோ எடுத்து போலீசில் பெண் வழக்கறிஞர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பின் சீட்டில் இருந்து வந்த கை... சரமாரி குத்து..! சிங்கப்பெண்ணிற்கு குவியும் வாழ்த்து..!

பேருந்து, ரயில் என பொது போக்குவரத்தில் பயணிக்கும் அணைத்து பெண்களும் பெரும்பாலும் எதிர்கொள்ளும் ஒரு சம்பவம், கூட்டத்தில் ஒருவர் சீண்டுவது, உரசுவது என பாலியல் தொந்தரவு. குழந்தைகள், பெரியவர் என வயது வித்தியாசம் இல்லமால் இந்த மாதிரியான செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் உள்ளது. இதற்காகவே ஒரு கூட்டம் சுற்றிக்கொண்டு  உள்ளது. குறிப்பாக பெற்றோரை விட்டு பிரிந்து வெளியூரில் வசிக்கும் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள் அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. பெண்களும் சொல்வதில்லை. புகார் அளித்தால் தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் எனக் கருதி பெரும்பாலும் அவற்றை பெண்கள் வெளியே கூறுவது கிடையாது.

இதையே சாதகமாக தங்களுக்கு பயன்படுத்திக்கொள்ளும் கும்பல் தொடர்ந்து அவர்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் சம்பவங்களும் தொடரத்தான் செய்கிறது. அதே நேரத்தில் இதற்கெல்லாம் விதிவிலக்காக பாலியல் அத்துமீறல்களில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பது, போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்கும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சமூக வலைதளங்களில் பெண் ஒரு வழக்கறிஞர் ஒருவர் செய்த செயல் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளம்பெண் ஒருவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு தனது தாயுடன் தனது சொந்த ஊருக்கு செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தில் ஏறிய அவர் பயணம் செய்து கொண்டிருந்தார். பேருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் பின்னே அமர்ந்து இருந்த ராகவன் என்ற 40 வயதான நபர் பேருந்து இருக்கை வழியாக கையைவிட்டு அவரிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற அந்தப் பெண் வழக்கறிஞர் தனது கைப்பையில் இருந்த சேப்டி பின்னை எடுத்து அவரது கையில்  குத்தி அதை வீடியோவாகவும் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார். மேலும் இது குறித்து மதுரவாயல் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடும் நபரை வெட்ட வெளிச்சமாக்கி காட்டியதோடு மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் பெண் வழக்கறிஞருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது. அவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகின்றது.