ஒரு வருடத்தில் பேரக் குழந்தை.... இல்லையென்றால் 5 கோடி இழப்பீடு..! மருமகளுடன் சட்ட ரீதியாக சண்டை போடும் மாமியார்!!

ஒரு வருடத்தில் பேரக்குழந்தை பெற்று தர தவறினால் 5 கோடி ரூபாய் இழப்பீடு தர கோரி மகனின் தாய் ஹரித்வார் நீதிமன்றத்தில் விசித்திரமாக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஒரு வருடத்தில் பேரக் குழந்தை.... இல்லையென்றால் 5 கோடி இழப்பீடு..! மருமகளுடன் சட்ட ரீதியாக சண்டை போடும் மாமியார்!!

சஞ்சீவ் பிரசாத் மற்றும் சாதனா பிரசாத் என்ற தம்பதியினர் தனது மகனுக்கு சுபாங்கி என்ற பெண்ணுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த மகனின் தாய், ஹரித்வார் மாவட்ட நீதிமன்றத்தில் விசித்திரமாக வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தன் மகனுக்கும் மருமகளுக்கும் குழந்தை இல்லாததன் காரணமாக மிகுந்த மன உளைச்சல் அடைந்துள்ளதாகவும், மகனும் மருமகளும் அடுத்த ஒரு வருடத்திற்குள் பேரக் குழந்தை பெற்று கொடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் 5 கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிப்பு செலவு முதல் திருமணம் உள்பட தேனீர் செலவு வரை தன் மகனுக்கு செய்த செலவுகளையும் மனுவில் பட்டியலிட்டு காட்டியுள்ளார்.  கூடுதல் தகவலாக தனது மகன் மருமகள் வீட்டாரின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மருமகள் தான் வாங்கும் சம்பளத்தை தாய் வீட்டுக்கு கொடுப்பதாகவும் மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.  

தாயின் மன வேதனை நியாயம் தான் என்றாலும் இயற்கை சார்ந்த ஒரு விஷயத்தில் 5 கோடி ரூபாய் இழப்பீடு கோருவது அநியாயம் என்றே சொல்ல வேண்டும். மேலும் குழந்தையில்லா வேதனை தாயை காட்டிலும் மருமகளுக்கே அதிகம் என்பது ஊரறிந்த உண்மை என்பதை மறுக்க முடியாது.