வழக்கு விசாரணையின் போது குளியலறையில் ஷேவிங் செய்த படி ஆஜரான நபர்!!

ஆன்லைன் மூலம் வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில் நபர் ஒருவர் ஷேவிங் செய்து கொண்டே ஆஜராகியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது குளியலறையில் ஷேவிங் செய்த படி ஆஜரான நபர்!!

கேரள உயர் ஐகோர்ட்டில்  கடந்த வாரம் முதல் நேரடியான வழக்கு விசாரணைகள் நடைபெறவில்லை. வழக்குகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடைபெற்று வந்த நிலையில் நேற்று ஒரு ஆன்லைன் விசாரணையில் நீதிபதி வீ. ஜி.அருண் நடத்திய ஒரு வழக்கு விசாரணையின்போது குளியலறையில் சேவ் செய்த படி ஒரு நபர் வழக்கில் ஆஜராகி இருந்தார் .

சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் இந்த சம்பவம் வெளியானது அடுத்து உடனடியாக இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கேரள ஐகோர்ட்டு  தனி பெஞ்ச் நீதிபதி வீ. ஜி.அருண் உத்தரவிட்டுள்ளார் .இதேபோன்று கடந்த முறை கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலமாக நடைபெற்ற ஒரு வழக்கு விசாரணையில் ஒரு நபர் மேல் சட்டை அணியாமல் நீதிமன்ற ஆன் லைன் விசாரணையில் ஆஜராகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்போது இது குறித்து கருத்து தெரிவித்திருந்த அப்போதைய தனி நீதிபதி நீதிமன்ற விசாரணையின் போது அதற்குரிய மரியாதையை கடைப்பிடிக்க வேண்டும் என்றும் சாதாரண மரியாதையை கூட கடைப்பிடிக்க மறந்து இதுபோல ஆஜராவது தவறு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.