சிரமப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு உதவிய அனுமான்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சிரமப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு அனுமான் வேடத்தில் வந்த நபா் ஒருவா்  உதவிய காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.  

சிரமப்பட்ட இஸ்லாமிய பெண்ணுக்கு உதவிய அனுமான்: சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ

சத்தீஷ்கர் மாநில ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் சரண், உதவும் கரங்கள் என்ற கேப்ஷனுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், தலையில் பழக்கூடையை சுமந்தபடி இஸ்லாமிய பெண் சாலையில் நடந்து வருகிறார். அப்போது, பாரத்தை தாங்க முடியாமல் பழக்கூடை கை நழுவி கீழே விழ, சாலையில் சிதறிய பழங்களை அந்த பெண் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அந்நேரம் அவ்வழியாக வந்த அனுமான் வேடமிட்ட நபர், தனது மிதிவண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு அந்த இஸ்லாமிய பெண்ணுக்கு உதவுகிறார். அங்கிருந்த சிசிடிவியில் பதிவான இந்த காட்சிதான், தற்போது சமூகவலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.

நாட்டில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், இந்த காட்சி மனிதத்தை போதிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.