திறந்திருக்கும் வீடுகளை குறிவைத்து செல்போன் திருட்டு- சிசிடிவி காட்சி வைரல்....

கோவையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் திறந்திருக்கும் வீடுகளை  குறிவைத்து செல்போன் திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திறந்திருக்கும் வீடுகளை குறிவைத்து செல்போன் திருட்டு- சிசிடிவி காட்சி வைரல்....

கோவை செல்வபுரம், குனியமுத்தூர், வெரைட்டி ஹால் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வீட்டை திறந்து வைத்து தூங்குவோரின் இல்லங்களில் செல்போன்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு போகும்  சம்பவம் தொடர்ந்து  அரங்கேறி வருகிறது. இது குறித்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் செல்வபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள்  காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.அந்த புகாரை தொடர்ந்து குற்றவாளிகளை பிடிக்க  காவல்துறையினர் தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். மேலும் திருட்டு நடந்த இடத்தில் வைக்கப்பட்டிருந் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றியும் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, சௌரி அம்மாள்,ரமேஷ் மற்றும் இந்து ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அக்கா திருடும் செல்போன்களை கள்ள சந்தையில் தம்பிகள் விற்பனை செய்துவருவதும் அம்பலமாகியுள்ளது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் தூங்கும் பொழுது வீட்டின் கதவுகளை சாத்தி விட்டு தூங்க வேண்டும் என  காவல்துறை அறிவுரை வழங்கியுள்ளனர்.....