ட்விட்டரில் டிரெண்டாகி வரும் "WE ARE WITH U DHANUSH ANNA" ஹேஷ்டேக்!!
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து முடிவு ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்த விவாகரத்து குறித்து பெரிதும் பேசப்பட்டு வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் தனுஷுக்கு ஆதரவு தெரிவித்து வலைதள பக்கங்களில் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில் தனுஷின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் "WE ARE WITH U DHANUSH ANNA" என்ற ஹேஷ்டேக்கை பதிவிட்டு ஆதரவு தெரிவித்து வைரலாக்கி வருகின்றனர்.இவர்களது விவாகரத்தினை ஏற்றுக் கொள்ள முடியாமல் பலரும் தனுஷிற்கு இணையதள பக்கத்தில் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
இது குறித்து அவரது ரசிகர்கள் வெளியிட்டுள்ள பதிவில் பல பிரச்சனைகள் வரும் போகும் பல போராட்ட சூழ்நிலைகளும் நிகழக் கூடும், பல வெறுப்பாளர்களும் உருவாக நேரிடும், அதனுடன் பல வகையான வதந்திகளும் வந்து சேரும் இருப்பினும் அவரது வெற்றியை எவராலும் தடுக்க இயலாது. தனுஷ் அண்ணாவுடன் ரசிகர்கள் ஆகிய நாங்கள் இருக்கிறோம் என அவரது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும் மற்றொரு ட்வீட்டில் ரசிகர்கள் தந்தை தாயின் உடல்நிலை குறித்து கவலை கொள்வதில்லை அவர்கள் இதனை எப்படி ஏற்றுக்கொள்வார்கள் என்று நினைத்துக் கூட பார்க்க இயலவில்லை உன் ரசிகனாக இருப்பது எளிய பணி அல்ல என்று எல்லாம் ரசிகர்கள் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர்.