உலகின் மிகப்பெரிய ரூபிக் கியூப்... வைரல் வீடியோ

உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூபின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலகின் மிகப்பெரிய ரூபிக் கியூப்... வைரல் வீடியோ

1979-ஆம் ஆண்டு நுரெம்பெர்க் விளையாட்டுப் பொருள் கண்காட்சியில் ரூபிக் கியூப் என்ற புதிர் விளையாட்டு பொருள் முதன்முதலில் இடம்பெற்றது.

இதனை உருவாக்கிய எர்னோ ரூபிக் நினைவாக ‘ரூபிக் க்யூப்’ என்ற பெயரில் இந்த விளையாட்டுப் பொருள் கடந்த 1980-ஆம் ஆண்டு உலகச் சந்தையில் விற்பனைக்கு வந்ததுடன் அதே ஆண்டில் ஜெர்மனி நாட்டின் சிறந்த விளையாட்டுக்கான விருதையும் பெற்றது.

இந்தநிலையில் உலகிலேயே மிகப்பெரிய ரூபிக் கியூபின் வீடியோவை கின்னஸ் உலக சாதனை அமைப்பு தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளது.

கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறும் சம்பவங்களின் வீடியோ பதிவை அந்நிறுவனம் அவ்வபோது இணையத்தில் பதிவேற்றுவது வழக்கம் அவ்வாறு பதிவேற்றப்பட்ட இந்த உலகின் மிகப்பெரிய ரூபிக் கியூபின் வீடியோவை லட்சக்கணக்கான இணையவாசிகள் கண்டு களித்து வருகின்றனர்.