எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் - கேன்ஸ் விழாவில் மேலாடையின்றி உக்ரைனிய பெண் போராட்டம்!

எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் என கூறி கேன்ஸ் திரைப்பட விழா சிவப்பு கம்பள வரவேற்பின்போது மேலாடையின்றி உக்ரைனை சேர்ந்த பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் -  கேன்ஸ் விழாவில் மேலாடையின்றி உக்ரைனிய பெண் போராட்டம்!

ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ள பகுதிகளில் பெண்கள் முதல் சிறு குழந்தைகள் வரை ஏராளமானோர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார்கள் வந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கேன்ஸ் தொடக்க விழாவில், தங்கள் நாட்டிற்கு உதவ வேண்டும் என கூறி வீடியோவும் வெளியிட்டு இருந்தார். இந்நிலையில் Three Thousand Years of Longing என்னும் படம் கேன்ஸ் விழாவில் திரையிடப்பட்டது.

அப்போது தனது உடலில் உக்ரேனிய கொடி மற்றும் எங்களை பாலியல் வன்கொடுமை செய்வதை நிறுத்துங்கள் என்ற வாசகங்களுடன் மேலாடை அணியாமல் வந்த பெண் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.