போரில் சக வீரரின் சடலத்தை இழுக்க முடியாமல் திணறும் ரஷ்ய வீரர்களின் வீடியோ வைரல்!!

போரில் சக வீரரின் சடலத்தை இழுக்க முடியாமல் திணறும் ரஷ்ய வீரர்களின் வீடியோ வைரல்!!

உக்ரைன் ராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சக வீரரின் சடலத்தை இழுக்க முடியாமல் திணறும் ரஷ்ய வீரர்களின் வீடியோ வெளியாகியுள்ளது.

மரியுபோலில் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையை நோக்கி முன்னேற முயன்ற போது ரஷ்ய வீரர்கள், உக்ரைன் படையின் சரமாரி துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டனர்.

அப்போது கடும் துப்பாக்கிச் சூட்டிற்கு மத்தியில் உயிரிழந்த த வீரரை பாதுகாப்பான இடத்திற்கு இழுத்துச் செல்ல மற்றொரு ரஷ்ய வீரர் முயல்கிறார். இதனையடுத்து, மேலும் ஒரு வீரர் வந்து மடிந்த வீரரை இழுத்துச் செல்ல முயல்கிறார்.

ஆனால், மீண்டும் சரமாரி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட, இருவரும் அவரை அங்கேயே விட்டு விட்டு பாதுகாப்பான இடத்திற்கு தப்பி ஓடுகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.