"லைஃப் ஆஃப் பை" படத்தை நினைவூட்டும் காட்சி - படகில் இருந்து நதியில் குதிக்கும் புலி!

"லைஃப் ஆஃப் பை" படத்தை நினைவூட்டும் காட்சி - படகில் இருந்து நதியில் குதிக்கும் புலி!

"லைஃப் ஆஃப் பை" என்ற படத்தில் வரும்  காட்சியை போன்று படகில் இருந்து நதியில் தாவி குதிக்கும் புலியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மீட்கப்பட்ட பெங்கால் புலி ஒன்றை வனத்துறை அதிகாரிகள் படகின் மூலம் சுந்தரவனக் காடுகளுக்குக் கொண்டு சென்ற போது எதிர்பாராத விதமாக அப்புலி நடு வழியில் படகில் இருந்து நதியில் தாவி குதித்துள்ளது.

நதியில் குதித்த புலி படகில் இருக்கும் மனிதர்களை திரும்பிக் கூட பார்க்காமல் காட்டை நோக்கி நீந்தி செல்கிறது. இதன் வீடியோ காட்சிகளை வனத்துறை அதிகாரி ஒருவர் இணையத்தில் பகிர்ந்துக் கொள்ள இது தற்போது வைரலாகி வருகிறது.