சுற்றுலா பயணிகள் முன்னே குட்டியை ஈன்ற திமிங்கலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

சுற்றுலா பயணிகள் முன்னே குட்டியை ஈன்ற திமிங்கலம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

அமெரிக்காவில் சுற்றுலா பயணிகள் முன் திமிங்கலம் ஒன்று குட்டியை ஈன்றெடுத்த நிகழ்வு அரங்கேறியுள்ளது.

திமிங்கலம்:

திமிங்கலங்கள் ஒரு அதிசய விலங்கு என்றேக் கூறலாம். காண்போரை மெய்மற்ந்து காணச் செய்யும் திமிங்கிலத்தில் 75-க்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. சுமாராக 24 மீட்டர் நீளம் வரை இருக்கும். உப்பு நீர் மற்றும் நன்னீரிலும் வாழக்கூடியது. உலகிலேயே அதிக சத்தம் போடக் கூடிய உயிரினம் திமிங்கலம் தான் எனவும் கூறப்படுகிறது. ஒரு திமிங்கலத்தின் சத்தம் ஒரு ஜெட் விமானம் ஏற்படுத்தும் சத்தத்தைக் காட்டிலும் கூடுதலாக இருக்கும் எனபது கூடுதல் தகவல்.

இதையும் படிக்க: தொட்டில் முதல் கல்லறை வரை ஆண் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டியவள் பெண் என்பதுதானே மனுவின் பிரிவினை? - ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முரசொலி பதிலடி

குட்டியை ஈன்ற திமிங்கலம்:

கலிபோர்னியாவில் உள்ள டனா பாயிண்ட் என்ற பகுதியில் 30 அடிக்கும் அதிகமாக உள்ள சாம்பல் நிற திமிங்கலம் ஒன்று உலாவிக் கொண்டிருந்தது. சுற்றுலா சென்றிருந்த பயணிகள் அந்த திமிங்கலத்தை ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தனர். அப்போது அந்த திமிங்கலம் திடீரென அழகிய குட்டியை ஈன்றுள்ளது.

அழகிய குட்டி திமிங்கலம், தாய் திமிங்கலத்தின் மேல் ஏறி விளையாடியுள்ளது. சில நிமிடங்களுக்கு பின்னர் அந்த திமிங்கங்கள் இரண்டும் நீருக்கு அடியில் சென்றுவிட்டது. இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.