ரோஜர் பெடரருக்கு ”வாத்தி கம்மிங்” டைட்டில் வைத்த விம்பிள்டன்..!

உலக ஃபேமஸ் ஆன விஜய் பட பாடலை கொண்டாடி வரும் ரசிகர்கள்..!

ரோஜர் பெடரருக்கு ”வாத்தி கம்மிங்” டைட்டில் வைத்த விம்பிள்டன்..!

ஒரு தமிழ் பாடல் நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு சென்றிருக்கிறது என்றால் சும்மாவா? அதிலும் விஜய் படத்தின் பாடல் என்றால் சொல்லவா வேண்டும்? சமீப காலமாக பல தமிழ்பாடல்களுக்கு ஹாலிவுட் நடிகர்களில் இருந்து விளையாட்டு வீரர்கள் பலரும் நனடமாடுவதை நாம் இணைய தளம் வாயிலாக பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தின் மாஸ்டர் பீஸ் பாடலான வாத்தி கம்மிங் பாடல் வரிகள் விம்பிள்டன் வரை சென்றிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்தாண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் மாஸ்டர். 

உலக ஃபேமஸான வாத்தி கம்மிங்..

படத்தில் வாத்தி கம்மிங் என்ற பாடல் மிகவும் டிரெண்ட் ஆனது. சிறுவர்கள் முதல், முன்பு கூறியதை போல, பல செலிபிரிட்டிகளும் அந்த பாடலுக்கு விஜய்யை போலவே நடனமாடி வீடியோ வெளியிட்டு இருந்தனர். படம் வெளியாகி ஒன்றரை வருடங்கள் ஆன பிறகும் கூட அந்த பாடலுக்கான மாஸ் மட்டும் குறைந்தபாடில்லை. வாத்தி கம்மிங் பாடல் வரிகளை விம்பிள்டன் டென்னிஸ் அமைப்பின் அதிகார ஃபேஸ்புக் பக்கத்திலேயே டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் ஃபெடரரின் வருகைக்கு பயன்படுத்தி உள்ளனர். இதனை கண்டதும் விஜய் ரசிகர்கள் நடிகர் விஜய்யின் உலகளவிலான ரீச்சை பார்த்து கொண்டாடி வருகின்றனர். அதுமட்டுமின்றி ட்விட்டரில் மீண்டும் வாத்தி கம்மிங் என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்ட்டாகி வருகிறது.

வாத்தி கம்மிங்? WELCOME BACK?

இந்த செய்தி தீயாய் பரவிய நிலையில் மீண்டும் அந்த போஸ்ட்டை பார்க்கலாம் என விம்பிள்டன் ட்விட்டர் பக்கத்திற்கு சென்றால் வாத்தி கம்மிங் என எழுதப்பட்டிருந்த இடத்தில் WELCOME BACK என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. சரி ஒருவேளை ஃபேஸ்புக்கில் அவ்வாறு இருக்குமோ என தேடிப் பார்த்த போது, இரண்டு வாசகங்களும் இருக்கும் படியான புகைப்படங்கள் உள்ளது. இதற்கு கீழே நிச்சயம் விம்பிள்டன் அட்மின் ஒருவேளை இந்தியராக இருக்கலாம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.