சாலையில் X போட்டு சென்ற இளைஞர்... டெல்லி காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ..!

சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்து நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்..!

சாலையில் X போட்டு சென்ற இளைஞர்... டெல்லி காவல்துறை வெளியிட்ட விழிப்புணர்வு வீடியோ..!

டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து கீழே விழும் இளைஞரின் வீடியோவை பதிவிட்டு, பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என அம்மாநில போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

நூலிழையில் உயிர்தப்பும் இளைஞர்: டெல்லி போக்குவரத்து காவல்துறை பொதுமக்களை கவரும் வகையிலும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் வீடியோக்கள் மற்றும் பதிவுகளை பகிர்ந்து வருகிறது. அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோவில், அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியபோது நிலைதடுமாறி சாலையில் விழுந்த இளைஞர், அருகே சென்ற வாகனத்தின் மீது மோதாமல் நூலிழையில் உயிர் தப்பிக்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த போக்குவரத்து காவல்துறை, பாதுகாப்புடன் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

Road par nahi chalegi TUMHARI MARZI,
Aise stunts karoge toh jodne ke liye bhi nahi milega KOI DARZI!#SpeedKills #RoadSafety pic.twitter.com/RFF7MR26Ao
— Delhi Traffic Police (@dtptraffic) August 3, 2022