கலாஷேத்ரா பாலியல் தொல்லை விவகாரம் ...! உதவி போராசிரியர் கைது...!

கலாஷேத்ரா பாலியல் தொல்லை  விவகாரம் ...! உதவி போராசிரியர் கைது...!
Published on
Updated on
1 min read
சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளையின்  கீழ் ருக்மணி தேவி நுணுகலை கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரி  மத்திய அரசின்  கலாச்சார துறையின் கீழ் இயங்கி வருகிறது. இந்நிலையில்  அந்த கல்லூரியில் பயிலும் மாணவ , மாணவிகளுக்கு நடனம் பயிற்சி மட்டும் அல்லது பல்வேறு கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது.
அந்த கல்லூரியில்  உதவி பேராசிரியராக ஹரி பத்மன்  பணியாற்றி வந்துள்ளார் . இந்நிலையில் ஹரிபத்மனும் அவருடன்  சேர்ந்த 4 பேர் தொடர்ந்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக   குற்றா சாட்டு எழுந்துள்ளது.  இதனை அடுத்து கல்லூரி நிர்வாகத்திடம்  மாணவிகள் புகார் தெரிவித்து இருக்கின்றனர். ஆனால் கல்லூரி நிர்வாகமோ   எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  இதனைக் கண்ட மாணவ ,மாணவிகள்   போராட்டங்களை குதித்தனர்
அதன் பின்னர் இந்த விவகாரம் தமிழக மக்களிடத்தில்   பெரும் சர்ச்சையாகவே பேசப்பட்டு வந்தது.
இதனை அடுத்து தற்போது நடந்த தமிழகச் சட்டமன்றத்தில் இந்த விவகாரம் பரபரப்பாகப் பேசப்பட்டது. அப்போது  சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்குச்  சரியான தண்டனை வழங்குவதாகவும் , மாணவிகளின் பாதுகாப்புக்குப் பெண் போலீசாரை பணியில் அமர்த்துவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
பின்னர், போலீசார் ஹரிபத்மனை விசாரணைக்கு ஆஜராகுமாறு  சம்மன் அனுப்பிய நிலையில் திடீரென அவர் தலைமறைவாகியுள்ளார். இந்த விவகாரத்தைத் தீவரமாகக் கையில் எடுத்த போலீசார் தனிப்படை அமைத்து ஹரிபத்மனை தேடி வந்தனர்.மேலும்  உறவினர்கள் ,நண்பர்கள் மற்றும் விசாரணை நடத்தியும் அவரது தொலைப்பேசி அழைப்புகளையும் ஆய்வு செய்து வந்தனர்.
அப்போது  ஹரிபத்மன் வடசென்னையில் உள்ள நண்பரின் வீட்டில் இருப்பதை அறிந்த போலீசார் அதிரடியாக கைது அவரை செய்தனர். பின்னர் ஹரிபத்மனிடம் தீவிர விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com