கருப்புத் துண்டை காணோமே! தீர்த்தமும், குங்குமமும் ! விமர்சனத்திற்குள்ளாகும் வைகோ வீடியோ

பகுத்தறிவு கொள்கையாளரான வைகோ, கருப்புத் துண்டை கழற்றிவிட்டு கோயிலில் குங்குமம் இட்டுக் கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பகுத்தறிவாளர்:
பகுத்தறிவு கொள்கை பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பகுத்தறிவு கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட வைகோ சிறுவயதிலேயே திராவிட, சமூக நீதி கொள்கைகளை மேடைகள் எங்கும் பேசி முழங்கி வந்தார். ஒரு காலத்தில் திமுகவின் மிக முக்கிய பேச்சாளராக திகழ்ந்த வைகோ, தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் அவை பேச்சுக்காகவே புகழ்பெற்றார்.
மதிமுக:
ஒரு கட்டத்தில் கருணாநிதியுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக திமுகவில் இருந்து விலகி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியை தொடங்கினார் வைகோ. தொடக்கத்தில் தமிழ்நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக அது உருவெடுந்த மதிமுக, வைகோவின் நிலைப்பாடற்ற கூட்டணி மாற்றம் காரணமாக சற்று சுருங்கி, தற்போது தவிர்க்கமுடியாத கூட்டணி கட்சிகளில் ஒன்றாக உள்ளது. தற்போது திமுகவுடன் கூட்டணியில் உள்ள மதிமுகவை கட்சிப் பணிகளை வைகோ மகன் துரை வைகோ கவனித்து வருகிறார்.
ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில்:
தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள ஸ்ரீ மேல மரத்தோணி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயில் 100 ஆண்டுகள் பழமையானது. அப்பகுதியில் பிரசித்திபெற்ற ஒன்றாக உள்ள இந்த கோயிலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தாத்தா கோபாலசாமி 100 அண்டுகளுக்கு முன்பு கட்டியதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க: ஆபத்தின் அறிகுறி! தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை
கோயில் புனரமைப்பு:
வைகோ திராவிட கொள்ளைவாதியாக இருந்தாலும், தனது தாத்தா கட்டிய கோயில் என்பதால் அதனை தனது சொந்த செலவிலேயே புனரைப்பு செய்து வருகிறார். இதற்காக அடிக்கடி கோயிலுக்கு சென்று புனரமைப்பு பணிகளை அவர் கவனித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் இவர் கோயிலுக்கு சென்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.
குங்குமமும், தீர்த்தமும்:
கடந்த 20 ஆம் தேதி புனரமைப்பு பணிகளை பார்வையிடுவதற்காக ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு சென்றுள்ளார் வைகோ. வைரலாகி வரும் வீடியோவில், கருப்பு துண்டை கழற்றி அருகில் உள்ள நபரிடம் கொடுத்த நிலையில் கருப்புத் துண்டுடன் ஒரு நபர் ஓரமாக நிறபது வீடியோவில் பதிவாகியுள்ளது. அருகே நின்றவரிடம் பணம் பெற்று அர்ச்சகர் தட்டில் காணிக்கை செலுத்திய் வைகோ, அர்ச்சகர் வழங்கிய தீர்த்தத்தை குடித்தபின், தட்டில் இருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டார்.
விமர்சனங்கள்:
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் இதனை பகிர்ந்து வைகோவையும் அவரது பெரியாரிய கொள்களையும் விமர்சித்து வருகின்றனர்.