சேற்றில் அமரவைத்து தொழிலாளியின் தலையில் குப்பை கொட்டிய எம்.எல்.ஏ... குவியும் கண்டங்கள்!!

குப்பைகளைச் சுத்தம் செய்யத் தவறியதாகக் கூறி, தொழிலாளியின் தலையில் கழிவு நீரில் அமரவைத்த குப்பையை கொட்டிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சேற்றில் அமரவைத்து தொழிலாளியின் தலையில் குப்பை கொட்டிய எம்.எல்.ஏ... குவியும் கண்டங்கள்!!

மும்பையில் கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சாலைகளில் தேங்கியுள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

இந்நிலையில், வடக்கு மும்பைக்கு உட்பட்ட கண்டிவாலா தொகுதியில் சாலைகளில் கழிவு நீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள், தொகுதி எம்.எல்.ஏ திலீப் லண்டேவிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சிவசோனவை சேர்ந்த எம்.எல்.ஏ திலீப் லண்டே, கழிவுநீரை அகற்றும் ஒப்பந்ததாரரை அழைத்து, கழிவுநீரைச் சுத்தம் செய்ய தவறியதாக சொல்லி, அவரை சாக்கடை நீரில் அமரவைத்து தலையில் கும்பைகளை கொட்டியுள்ளனர் எம்.எல். ஏவின் ஆதரவாளர்கள்.

இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. எம்.எல்.ஏவின் செயலுக்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இவரின் இந்த செயல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அனால் திலீப் லண்டே எம்.எல்.ஏ கடமை செய்ய தவறியதால் இப்படியான தண்டனை வழங்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்துள்ளார்.