வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகள்...மர்மமான முறையில் இறந்த முதியவர்..

அமெரிக்காவில் வீட்டில் இருந்த நபர் மர்மமான முறையில் இறந்து கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டுக்குள் 125 விஷப்பாம்புகள்...மர்மமான முறையில் இறந்த முதியவர்..

அமெரிக்காவில் உள்ள ஒரு வீட்டில் 49 வயதான நபர் ஒருவர் மர்ம முறையில் இறந்துள்ளார்.இறந்து கிடந்த அவரை மீட்க முயற்சி செய்த போது சுமார் அவரை சுற்றி 125 பாம்புகள் இருந்ததாக காவல்துறையினர் தரப்பில் சொல்லப்படுகிறது.அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டியில் வசித்துவந்த 49 வயதான முதியவர் இரண்டு நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரதபடியும் வீட்டிற்குள் ஆள் நடமாட்டம் இல்லாதபடியும் இருந்துள்ளது. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் அதிகாரிகள் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது அந்த முதியவரானவர் மயங்கி கீழே விழுந்த படி இருந்துள்ளார்.மேலும் அவரை சுற்றி 14 அடி மஞ்சள் பர்மிய மலைப்பாம்பு உட்பட 125 க்கும் மேற்ப்பட்ட விஷ பாம்புகள் உயிருடன் இருந்துள்ளது.தொடர்ந்து, அந்த நபரை மீட்டு பரிசோதனை நடத்தியதில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர் தனது வீட்டில் மலைப்பாம்பு, பாம்பு, நாகப்பாம்பு, கருப்பு மாம்போ உள்ளிட்ட பல்வேறு வகையான பாம்புகளை வளர்த்து வந்ததாக போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரிவித்தனர்.

விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரிகள் பாம்புகளை பிடித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பின்பு, கவுண்டியின் தலைமை விலங்கு கட்டுப்பாட்டு அதிகாரி காவல்துறைக்கு அளித்த தகவலில், 'தனது 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தில் இதுபோன்ற சம்பவத்தை பார்த்ததில்லை என்று தெரிவித்துள்ளார். வட கரோலினா மற்றும் வர்ஜீனியாவைச் சேர்ந்த பாம்பு நிபுணர்களின் உதவியுடன், சார்லஸ் கவுண்டி அனிமல் கன்ட்ரோல் பாம்புகளை மீட்டனர். சுற்றுப்புறத்தில் வசிப்போர் பாம்புகள் குறித்து பயப்பட தேவையில்லை. அனைத்து பாம்புகளும் பிடிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேரிலாந்து சட்டத்தின்படி, பாம்பை வீட்டில் யாரும் செல்லப் பிராணியாக வளர்க்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

பிரேத பரிசோதனைக்காக அந்த நபரின் உடல் பால்டிமோரில் உள்ள தலைமை மருத்துவ பரிசோதகர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது மறைவில் எந்தவொரு சந்தேகமும் இல்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.