தன்னந்தனியாக உலகத்தை சுற்றி வந்த 19 வயது பெண்!!

பெல்ஜியத்தை சேர்ந்த ஜாரா ரூதர்போர்ட் என்ற 19 வயது இளம்பெண்  ஒருவர் தன்னந்தனியாக உலகத்தை சுற்றி சாதனை படைத்துள்ளார்.

தன்னந்தனியாக உலகத்தை சுற்றி வந்த 19 வயது பெண்!!

பெல்ஜியத்தை சேர்ந்த ஜாரா ரூதர்போர்ட் என்ற 19 வயது இளம்பெண்  ஒருவர் தன்னந்தனியாக உலகத்தை சுற்றி சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆகஸ்ட் மாதம் அந்நாட்டின் கோர்ட்ரிஜிக், விவெல்ஜெம் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அவர் இதுவரை 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்துள்ளார்.

இதுவரை 51 ஆயிரம் கிலோ மீட்டர் பறந்துள்ள ஜாரா வரும் 17ம் தேதி தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். இந்த சாதனை மூலம் உலகம் முழுவதும் உள்ள இளம்பெண்களை ஊக்குவிக்க முடியும் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் விண்வெளி வீராங்கனையாக வேண்டும் என்பதே தனது லட்சியம் எனவும் ஜாரா குறிப்பிட்டுள்ளார்.