தென்னாப்பிரிக்காவில் இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 பேர் உயிரிழப்பு..!

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயது மதிக்கத்தக்கவர்கள் எனத் தகவல்!!

தென்னாப்பிரிக்காவில் இரவு விடுதியில் மர்மமான முறையில் 20 பேர் உயிரிழப்பு..!

தென்னாப்பிரிக்காவில் இரவு விடுதியில் சுமார் 20 பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 18 வயது முதல் 20 வயதை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. தென்னாப்பிரிக்கா நாட்டின் தலைநகர் ஜோகனஸ்பெர்க்கில் இருந்து சுமார் 1,000கிமீ தொலைவில் உள்ள நகரம் தெற்கு லண்டன். இங்குள்ள இரவு விடுதி ஒன்றில் பள்ளி இளைஞர்கள் தேர்வு முடித்து விட்டு பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இரவு முழுவதும் பார்ட்டி களைக்கட்டிய நிலையில், காலை அந்த இரவு விடுதியில் பலர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். 

உடல்களை கைப்பற்றிய காவல்துறையினர்..

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அந்த இரவு விடுதி அமைந்திருந்த பகுதியை சீல் வைத்து, உடல்களை கைப்பற்றினர். மேலும் உயிருக்கு ஆபத்தான முறையில் இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 20 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் என கூறப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் 17 பேர், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி 3 பேர் என மொத்தம் 20 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்த இளைஞர்களின் உயிரிழப்புக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.