22 % அதிகரித்த பேருந்து கட்டணம்; ஸ்ரீலங்காவில் தொடர்ந்து அதிகரிக்கும் கொடூர விலைவாசி:

வருடாந்த இடைக்கால பஸ் கட்டண திருத்தத்தின் படி, இன்று நள்ளிரவு நிலவரப்படி கட்டணம் 22% அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் (NTC) பணிப்பாளர், நாயகம் நிலான் மிராண்டா தற்போது தெரிவித்துள்ளார்.

தகவல் துறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், குறைந்தபட்ச பஸ் கட்டணம் ரூ.40 ஆக இருக்கும் என்றும், சமீபத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து பேசிய மிராண்டா, “இந்த வருடத்தில் மட்டும் நான்கு முறை பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. கடந்த ஜூன் 28ம் தேதி, இடம்பெற்ற கலந்துரையாடலின் போது தனியார் பேருந்து உரிமையாளர்கள் 30% அல்லது குறைந்தது 20% கட்டண உயர்வை கோரியிருந்தனர். ஆனால் பன்னிரெண்டு அடிப்படைகளை கருத்தில் கொண்டு கணக்கீடு செய்து, தற்போது பேருந்து கட்டணம் 22 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், “ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி பேருந்துக் கட்டணத் திருத்தம் செய்யப்படுகிறது. பொதுவாக எரிபொருட்களின் விலை 10 வீதத்திற்கு மேல் அதிகரிக்கப்படுவதாக எதிர்பார்க்கப்பட்டால், அதற்கு ஏற்றது போல பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்பட வேண்டும். ஆனால் குறைந்தபட்ச செலவைக் கருத்தில் கொண்டு பேருந்துக் கட்டணக் கணக்கீடு செய்யப்படும். அது போல தான் இந்த முறையும் செய்யப்பட்டுள்ளது” என்றார் மிராண்டா.

இன்று இரவு முதல், புதிய பேருந்து கட்டணம் அமுலுக்கு வரும் நிலையில், 22% வீதத்திற்கு ஏற்ப இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் கட்டணங்களும் அதிகரிக்கப்படவுள்ளன. மேலும், குறைந்தபட்ச விலையாக 40 ஸ்ரீலங்க ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.