35 வயதான உலகின் மிகப்பெரிய பாண்டா ஆன் ஆன் இறந்தது!

35 வயதான உலகின் மிகப்பெரிய பாண்டா ஆன் ஆன் இறந்தது!

உலகின் மிகப் பழமையான ஆண் ராட்சத பாண்டாவான 'ஆன் ஆன்', வியாழக் கிழமையான இன்று கருணைக்கொலை செய்யப்பட்டது. அந்த பண்டாவின் வயது 35. இது மனிதர்களின் 105 வயதுக்கு சமம் என்று ஹாங்காங் தீம் பார்க் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

கடந்த சில வாரங்களாக 'ஆன் ஆன்' பாண்டாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. மேலும் அது உணவு உட்கொள்வது குறைந்து, அவர் இறுதியாக சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டது என, 1999 லிருந்து அந்த பாண்டா வாழ்ந்த ஓஷன் பார்க் தெரிவித்துள்ளது. மேலும், 'ஆன் ஆன்' பாண்டா உயிரிழந்தது வருத்தமளிப்பதாக அறிக்கையும் வெளியிட்டுள்ளது. 

இதே போன்று ' ஜியா ஜியா ' என்ற பெண் ராட்சத பாண்டா கடந்த 2016 ம் ஆண்டு தனது 38 வயதில் உயிரிழந்தது. அதற்காக சீன அரசிடம் இருந்து பரிசுகளும் பெற்றது. 

World's oldest known male giant panda, An An, dies at 35 - Oldest male  giant panda | The Economic Times

இது குறித்து பேசிய பூங்கா, ' ஜியா ஜியா ' மற்றும்  'ஆன் ஆன்' பாண்டாக்களை பார்த்துக்கொள்வதற்கு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்து, பாண்டாக்களைப் பாதுகாப்பதில் ஓஷன் பூங்காவிற்கு முக்கிய பங்குள்ளது என்றும் தெரிவித்தது. 

மேலும், " 'ஆன் ஆன்' எங்கள் குடும்பத்தில் ஒரு தவிர்க்கமுடியாத நபர். மேலும், இது உள்ளூர் வாசிகளுடனும், சுற்றுலா பயணிகளிடமும் நல்ல நட்பு ரீதியான பிணைப்பை கொண்டிருந்தது. " என பூங்கா நிர்வாகம் தெரிவித்தது.

ஓஷன் பார்க்-கில் தற்போது நிலவாழ் விலங்குகள் மட்டுமின்றி, கடல் வாழ் விலங்குகள், பென்குயின்கள், டால்ஃபின்கள் மற்றும் இரண்டு ராட்சத பாண்டாக்களான ' இங் இங் ' மற்றும் ' லீ லீ ' ஆகியவற்றைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இவர்களது இறப்பு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியது.

சீனா 2007ம் ஆண்டில், பெண் பாண்டா ' இங் இங் ' மற்றும் ஆண் பாண்டா  ' லீ லீ ' ஆகியவற்றை ஹாங்காங்கிற்குக் கொடுத்தது. இந்த ஜோடிக்கு குழந்தை பிறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வர, இது குறித்த எந்த நற்செய்தியும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.