அமெரிக்க-கனடா எல்லையில் பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் பலி!!

அமெரிக்க-கனடா எல்லையில் பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்க-கனடா எல்லையில் பனியில் உறைந்து இந்தியர்கள் 4 பேர் பலி!!

அமெரிக்காவின் அண்டை நாடான கனடா வழியாக ஏராளமான அகதிகள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைகின்றனர். அந்த வகையில் மனிதர்களை கடத்தும் கும்பல்கள் அகதிகளிடம் இருந்து பணத்தை பெற்று கொண்டு அவர்களை அமெரிக்காவுக்குள் கடத்தி கொண்டு விடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. 

இந்த நிலையில் மனிதர்களை கடத்தும் கும்பலை சேர்ந்த ஒருவர் அகதிகள் சிலரை வேனில் அடைத்து வைத்து, அமெரிக்காவுக்குள் கடத்தி செல்ல முயன்றுள்ளார். அப்போது, அமெரிக்காவின் வடக்கு டகோடா மாகாணத்துக்கு அருகே கனடா எல்லையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த வேனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.  

வேனுக்குள் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை 4 பேர் பனியில் உறைந்து போன நிலையில் பிணமாக கிடந்தனர். அவர்களின் உடல்களை மீட்ட பாதுகாப்பு படை வீரர்கள் அவர்களை வேனில் அடைத்து வைத்து கடத்தி வந்த ஸ்டீவ் ஷாண்ட்என்பவரை கைது செய்தனர். இதனிடையே பனியில் உறைந்து இறந்தபோன 4 பேரும் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது.