இலங்கையில் புதிதாக 4 அமைச்சர்கள் பொறுப்பேற்பு!!

இலங்கையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசில் நான்கு புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இலங்கையில் புதிதாக 4 அமைச்சர்கள் பொறுப்பேற்பு!!

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு இடையே மக்கள் போராட்டத்துக்கு அடிபணிந்து பிரதமர் பதவியிலிருந்து மகிந்தா ராஜபக்சே விலகினார்.

இதனை தொடர்ந்து இலங்கை ஐக்கிய தேசிய கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டார். ரணில் பதவியேற்ற உடனே 15 பேர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்கும் எனத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் வெளிநாட்டு விவகாரங்கள் துறை, பொது நிர்வாகம், உள்துறை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி ஆகிய 4 முக்கிய துறைகளுக்கு மட்டும் புதிதாக அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி ஜி.எல். பெரிஸ் நிதித்துறை அமைச்சராகவும், பிரசன்ன ரணதுங்க நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராகவும், தினேஷ் குணவர்த்தன பொதுத் துறை அமைச்சராகவும், காஞ்சனா மின்சாரத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

முழு அமைச்சரவையை நியமிக்கும் வரை நாடாளுமன்றம் மற்றும் நாட்டின் ஏனைய செயல்பாடுகளை மேற்கொள்ளும் பணியில் இவர்கள் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது