டோங்கா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

சுனாமியின் பாதிப்பிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் டோங்கா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

டோங்கா தீவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவு

சுனாமியின் பாதிப்பிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் டோங்கா தீவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

காலை 6.40 மணிக்கு பங்காய் என்ற இடத்திற்கு 219 கிலோ மீட்டர் தொலைவில்  6.2 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த 15-ம் தேதி கடலுக்கடியில் வெடித்த எரிமலை, அதனைத் தொடர்ந்த சுனாமியால் டோங்கா தீவு பெரும் சேதத்தை சந்தித்தது.

கடலுக்கடியில் அமைக்கப்பட்டிருந்த இணைய இணைப்புகள் முற்றிலும் அழிந்தன. அவற்றை  சரி செய்ய இன்னும் 4 மாதங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது. இதனால் வெளியுலகுடனான டோங்காவின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.