100 ஆண்டு பழைமை வாய்ந்த பாஸ்போர்ட் தான்.. நான் கண் மருத்துவர் ஆகா காரணம் - மனம் திறந்த வாலிபர்!!

100 ஆண்டு பழமையான பாஸ்போர்ட் தான் தனது மருத்துவ கனவை தொடர ஊக்கமளிப்பதாக வாலிபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

100 ஆண்டு பழைமை வாய்ந்த பாஸ்போர்ட் தான்.. நான் கண் மருத்துவர் ஆகா காரணம் - மனம் திறந்த வாலிபர்!!

ஆகஸ்ட் 8, 1921 அன்று பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட பாஸ்கர் கங்காதர் கேல்கருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான பாஸ்போர்ட், புனேவில் உள்ள BORI என்கிற நிறுவனம் மூலம் மீட்டெடுக்கப்பட்டது.

இது குறித்து பாஸ்கர் கங்காதர் கேல்கரின் மகன், “இந்த பாஸ்போர்டிற்கு பின்னால் ஒரு சோகமான கதை இருக்கு... அது எங்கள் குடும்பத்துக்கு மிகவும் முக்கியமானது” என கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், எம்.பி.பி.எஸ் படிப்பை முடித்து விட்டு மேற்படிப்புக்காக லண்டன் செல்ல திட்டமிட்டிருந்த என் தந்தை, 1921 ஆகஸ்ட் 8ல், பிரிட்டிஷ் அரசால் பாஸ்போர்ட் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசுகையில், “என் தந்தை பிஜாப்பூரில் வசித்து வந்தார், மேலும் அவர் கண் சிகிச்சை மருத்துவம் படிக்க முடிவு செய்து புனேவுக்கு படிக்க வந்தபோது மருத்துவத்தில் பொது பயிற்சியாளராகவும் பணியாற்றினார். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக, அவர் ஒரு கிளினிக்கைத் திறந்தார்.

பின், இங்கிலாந்தில் டிப்ளமோ படிக்க விரும்பினார். அதற்காக ஆகஸ்ட் 21, 1921 அன்று பாஸ்போர்ட் பெற பம்பாய் சென்றார். அதன் பிறகு, லண்டனுக்குப் புறப்படத் தயாராகிக் கொண்டிருந்தபோது, நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அவர் அவரது கிளினிக்கிலிருந்து திரும்பி வரும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்ட நிலையில் அவரது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இந்த விபத்து அவரது கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.” என்று கூறி வருந்தினார்.

இது குறித்து BORI நிறுவனத்தின் தலைவர் பூபால் பட்வர்தன் கூறுகையில், “நிறுவனத்தின் பழைய கையெழுத்து நகல்கள் மற்றும் புத்தகங்களைக் கையாள்வதற்காக நாங்கள் ஒரு சிறப்பு ஆய்வகத்தை அமைத்துள்ளோம். 

மேலும் 28,000 கையெழுத்து நகல்கள் மற்றும் 1.5 லட்சம் புத்தகங்களை வைத்துளோம். அவற்றை நாம் பாதுகாக்க வேண்டும். அந்த பழைய 1.5 லட்சம் புத்தகங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களைப் பாதுகாக்க உதவும் வகையில் பாரத் இதிஹாஸ் சன்ஷோதனுடன் இணைந்து செயல்படுகிறோம். இதனால், கேல்கரைப் பற்றி கேள்விப்பட்டதும், நாங்கள் உதவ முன்வந்தோம்.

BORI நிறுவனம், காகிதத்தின் ஆயுளைப் 60 வருடங்கள் வரை நீடிக்கும் அளவிற்கு ரசாயனங்களைப் பயன்படுத்தி புள்ளிகள் மற்றும் கண்ணீரை அகற்றும் ஒரு முழுமையான செயல்முறையைப் பயன்படுத்தியது.

“பாஸ்போர்ட்டின் நிலை நன்றாக இல்லை. அதில் நிறைய கண்ணீர் மற்றும் புள்ளிகள் இருந்தது. அதன் ஆயுளை 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் வகையில் மேம்படுத்தியுள்ளோம்..என்றார் பட்வர்தன். மேலும் ஸ்ரீகாந்த் கூறியது, என் தந்தையின் பாரம்பரியத்தை எடுத்து செல்ல நான் கண் மருத்துவர் ஆனேன்.. இந்த பாஸ்போர்ட் தான் எங்கள் குடும்பத்துக்கு உத்வேகம் அளித்தது என்றார்.