ஹாங்காங்கில் தென் சீன கடல் பகுதியில் புயலில் சிக்கிய படகு..! 27 பேர் மாயமாகி இருப்பதாக தகவல்..!

காணாமல் போன 27 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல்..!

ஹாங்காங்கில் தென் சீன கடல் பகுதியில் புயலில் சிக்கிய படகு..! 27 பேர் மாயமாகி இருப்பதாக தகவல்..!

சீனாவின் தன்னாட்சி பகுதியான ஹாங்காங்கின், தென்சீன கடல் பகுதியில் கப்பல் ஒன்று புயலில் சிக்கி உடைந்த நிலையில் அதில் இருந்த 27 பயணிகள் காணாமல் போகியுள்ளனர். ஹாங்காங்கின் குவாங்டாங் மாகாணத்திற்கு உள்பட கடல் பகுதியில் கப்பல் பயணித்துக்கொண்டிருந்தபோது திடீரென பயங்கரமான புயல் தாக்கியது. இதனால் கப்பல் இரண்டாக உடைந்ததால் அதில் பயணித்த 30 பேரும் கடலில் தத்தளித்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில், 3 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் காணாமல் போன 27 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.