பாகிஸ்தானில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் பலியான சோகம்...

பாகிஸ்தானில் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 20 பேர் பலியான சோகம்...

பாகிஸ்தானில் பலுசிஸ்தான் அருகே 200 அடி பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 20 பயணிகள் உயிரிழந்தனர்.  

ராவல்பிண்டியில் இருந்து குவெட்டாவுக்குச் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து அதி வேகம் மற்றும் கனமழை காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கிற்குள் பாய்ந்தது.

இதில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்பட 20 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 14 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் சாலைக் கட்டுமானங்கள் மற்றும் பராமரிப்பு ஆகியவை மோசமான நிலையில் உள்ளதால் இதுபோன்ற விபத்துக்கள் நிகழ்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த மாதம் கிலா சைபுல்லா மாவட்டத்தில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து 22 பேர் உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.