யூடியூப் பார்த்து விமானம் தயாரித்த - இந்திய வம்சாவளி குடும்பம்!!

யூடியூப் பார்த்து விமானம் ஒன்றை உருவாக்கி இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் அசத்தியுள்ளனர்.

யூடியூப் பார்த்து விமானம் தயாரித்த - இந்திய வம்சாவளி குடும்பம்!!

கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த குடும்பம் நான்கு பேர் பயணிக்கும் வகையில் இருக்கும் விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர்.பயிற்சி பெற்ற விமானியான அசோக் என்பவருக்கும் அவரது மனைவியான அபிலாஷா விற்கும் விமானம் ஒன்றை வாங்குவது கனவாக இருந்துள்ளது.ஆனால் அவர்களது விருப்பத்திற்கு ஏற்ற வகையில் உள்ள விமானத்தை அவர்களால் கண்டுப்பிடிக்க இயலவில்லை என கூறியுள்ளனர்.

இதையடுத்து அவர்கள் இருவரும் தங்களுக்கு விருப்பமான வகையில் விமானத்தை தாங்களே உருவாக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் விமானத்திற்கான பாகங்களை தென்ஆப்பிரிக்காவில் இருந்து வாங்கியுள்ளனர். இதையடுத்து விமானம் தயாரிக்கும் வழிகாட்டுதல் கையேடு மற்றும் யூடியூப் வீடியோக்களின் உதவியுடன் அசோக்கும் அவரது மனைவியும் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் 4 பேர் பயணிக்கும் வகையிலான விமானத்தை உருவாக்கி அசத்தியுள்ளனர்.