தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ.10 கோடி மதிப்புள்ள வீடு பரிசு... எங்கே தெரியுமா

ஹாங்காங்கில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம்காட்டி வருவதால் அந்நாட்டு அரசுமக்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.

தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ.10 கோடி மதிப்புள்ள வீடு பரிசு...  எங்கே தெரியுமா

உலகையே உலுக்கி வரும் பெரும் தொற்றாக கொரோனா வைரஸ் பார்க்கப்படுகிறது. இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை ஒவ்வொரு நாடும் அதிதீவிரமாக எடுத்து வருகிறது. தற்போது கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடப்பட்டு வருகிறது

கொரோனா தடுப்பூசியை பல நாடுகள் பொதுமக்களுக்கு போட்டு வந்தாலும், தடுப்பூசி குறித்த அச்சமும் பொதுமக்களிடையே இருந்து வருகிறது. இந்நிலையில் தான் மக்களிடையே தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வத்தை ஏற்படுத்த தாய்லாந்து அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடக்கு தாய்லாந்தில், ஒவ்வொரு வாரமும் 319 டாலர் மதிப்புள்ள மாடுகளை குறிப்பிட்ட மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் வெல்ல முடியும் என்ற பிரச்சாரத்தை மேற்கொண்டது .


தாய்லாந்தின் இன்னும் சில மாகாணங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு தங்க நெக்லஸ் , தள்ளுபடி கூப்பன்கள் போன்றவைகளுடன் தடுப்பூசி போடும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நிறைய கவர்ச்சிகரமான சலுகைகளையும் அறிவித்தன .

இதுபோன்ற அறிவிப்புகளை அடுத்து மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்ட தொடங்கினர். இந்நிலையில் தற்போது தடுப்பூசி போட்டுக் கொண்டால் ரூ.10 கோடி மதிப்புள்ள வீடு லாட்டரி மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

449 சதுர அடியில் வீடு பரிசாக வழங்கப்படும் என்று ஹாங்காங் டெவலப்பர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்பவர்கள் இதற்கு தகுதியானவர்கள் என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.