நடைபாதையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கொதிக்கும் தண்ணீர் குழாயில் விழுந்த சுற்றுலா பயணி...!

ஆஸ்திரேலிய சுற்றுலா பெண் பயணி ஒருவர், நியூசிலாந்து பகுதியின் நடைபாதையில் நடந்து செல்லும் போது, நிலப்பகுதியில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில், கொதிக்கும் தண்ணீர் நிறைந்த குழாயில் விழுந்துள்ளார்.

கடந்த வியாழன் அன்று ( 28.07.2022) சுற்றுலா பயணி ஒருவர், நியூசிலாந்தின் ரோடோருவா பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென நிலத்தில் ஏற்பட்ட பள்ளத்தில் அவர் விழுந்துள்ளார். மேலும் குறிப்பாக, நிலத்திற்கு அடியில் செல்லும் கொதிக்கும் தண்ணீர் நிறைந்த குழாயில் விழுந்துள்ளார். அதனால், அவர், கடுமையான தீக்காயங்களுடன் கிட்டத்தட்ட உயிரிழந்த நிலையில் உள்ளார். 

இந்த ஜோடி கணவன்-மனைவி மற்றும் ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் இருந்து விடுமுறைக்கு வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் கூறும் போது, " எனது மனைவி துளைக்குள் விழுந்துவிட்டாள். இறுதியில் அவர் அதிலிருந்து மீட்கப்பட்டு, மருத்துவர்களால் கவனித்துக் கொள்ளப்படுகிறார் " என தெரிவித்துள்ளார். 

இது அப்பகுதியில் புவிவெப்ப நடவடிக்கை காரணமாக நடந்துள்ளது. மேலும் இந்த பள்ளம்,  சுமார் 1.5 மீட்டர் ஆழத்தில் இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் அறிக்கை தெரிவிக்கின்றன. வக்கரேவரேவ தி லிவிங் மௌரி கிராமத்தில் அமைந்துள்ள அந்த நடைபாதை தற்போது போலீஸாரால் மூடப்பட்டுள்ளது.