அல்கொய்தா தலைவர்  சுட்டுக்கொலை  :  நீதி வழங்கப்பட்டுவிட்டது- அதிபர் ஜோ பைடன் !!

ஆப்கானிஸ்தானில் தலைமறைவாக இருந்த அல்கொய்தா தலைவர் ஜவாஹிரி சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அல்கொய்தா தலைவர்  சுட்டுக்கொலை  :  நீதி வழங்கப்பட்டுவிட்டது- அதிபர் ஜோ பைடன் !!

உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் பயங்கரவாத கும்பல் தலைவர்களை அமெரிக்கா சுட்டு வீழ்த்தி வருகிறது. கடந்த 2011ம் ஆண்டு அல் கொய்தா அமைப்பின் தலைவரும், மாஸ்டர் மைண்டாக செயல்பட்டு வந்தவருமான ஓசாமி பின் லேடனை அமெரிக்க படை பாகிஸ்தானில் சுட்டுக்கொன்றது. 

அதனைத்தொடர்ந்து இந்த அதிரடி தாக்குதலில் இருந்து விலகியிருந்த அமெரிக்கா, கடந்த ஞாயிற்று கிழமை ஆப்கானிஸ்தான் மீது சிஐஏ ஆளில்லா விமானம் மூலம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.  இதில் அந்த அமைப்பின் மூளையாக செயல்பட்டு வந்த  அல்கொய்தா தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.  

தொழில் மற்றும் பொருளாதார நிர்வாகத்தில் கல்வி கற்றதோடு, சிவில் என்ஜினியர் பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். எகிப்து ராணுவத்தில் மருத்துவராகவும் பணியாற்றி வந்துள்ளார். ஒசாமா மறைவுக்கு பிறகு அல்கொய்தா தலைவராக நியமனம் செய்யப்பட்டிருந்தார். 

இந்தநிலையில் அவர் கொல்லப்பட்டதை டுவிட்டர் வாயிலாக உறுதி செய்துள்ள அதிபர் ஜோ பைடன், நீதி கிடைத்துவிட்டதாகவும், மக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்போர் எங்கிருந்தாலும் தேடி கண்டுபிடித்து தண்டிக்கப்படுவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.