மீண்டும் கொரோனா அச்சம் காரணமாக விமான சேவைகள் முடக்கம்...சீன நகரங்களில் தொடரும் பீதி !!

மீண்டும் கொரோனா அச்சம் காரணமாக விமான சேவைகள் முடக்கம்...சீன நகரங்களில் தொடரும் பீதி !!

கொரோனா அச்சம் காரணமாக சீனாவின் குவாங்சோ நகரில் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
அங்குள்ள விமான நிலைய ஊழியர்களுக்கும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஷாங்காயில் நடப்பிலுள்ள முடக்கநிலையைத் தவிர்க்க குவாங்சோவில் உள்ள 7 வட்டாரங்களில் பெரிய அளவிலான தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அதோடு பீஜிங்கில் உள்ள பாடசாலைகளும் அலுவலகங்களும் மூடப்பட்டுள்ளன. அங்குள்ள குடியிருப்புப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பீஜிங்கில் 50-க்கும் மேற்பட்ட வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அதேவேளை 21 மில்லியன் பேருக்கும் அதிகமானோர் வசிக்கும் பீஜிங்கில் மூன்றாவது முறையாக வைரஸ் தொற்றுப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.