இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டி!

இங்கிலாந்து பிரதமருக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் போட்டி!

பல்வேறு தொடர் குற்றச்சாட்டுகளாலும் அமைச்சர்களின் அடுத்தடுத்த பதவி விலகலாலும் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவி இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார். இதைத்தொடர்ந்து வெளி விவகாரங்களுக்கான சிறப்புக்குழு தலைவராக இருந்து வரும் டாம் டுகென்தாட்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் பங்கேற்க உள்ளதாக அறிவித்ததை அடுத்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி நடத்தவிருக்கும் வாக்கெடுப்பில் பங்கேற்கும் எம்பிக்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் போரிஸ் ஜான்சனை பதவி விலகக் கோரி நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்கும் இந்த போட்டியில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் அவர், போட்டியிடும் பட்சத்தில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்படுகிறது.