தோல்வியைத் தழுவிய ஏஞ்சலா மெர்க்கல்  கட்சி... 16 ஆண்டுகள் தொடர்ந்த  ஆட்சி முடிவுக்கு வந்தது..

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி சொற்ப வாக்குகளில் தோல்வியை தழுவியுள்ளது. 

தோல்வியைத் தழுவிய ஏஞ்சலா மெர்க்கல்  கட்சி... 16 ஆண்டுகள் தொடர்ந்த  ஆட்சி முடிவுக்கு வந்தது..

ஜெர்மனி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நேற்று விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. ஜெர்மனியின் முதல் பெண் பிரதமராக கடந்த 2005-ஆம் ஆண்டு பொறுப்பேற்ற ஏஞ்சலா மெர்க்கல், தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வந்தார்.

தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்த ஏஞ்சலா மெர்கல் இந்த முறை தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும் அரசியல் வாழ்வில் இருந்தும் முழுமையாக விலகுவதாக அவர் அறிவித்தார்.

இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில் தற்போதைய பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி 1. 5 சதவீதம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் 16 வருட ஏஞ்சலா மெர்க்கல் தலைமையிலான ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. சமூக ஜனநாயகக் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.