ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போரடும் மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பலி!

ராணுவ ஆட்சிக்கு எதிராக தொடரும் போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியான சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஆட்சி கவிழ்ப்புக்கு எதிராக போரடும் மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூடு - மூன்று பேர் பலி!

சூடானில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு எதிராக போராடி வரும் மக்கள் மீது ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் மூவர் உயிரிழந்தனர்.

சூடானில் கடந்த ஆண்டு அக்டோர் 25 அன்று பிரதமர் அப்துல்லா ஹம்டோக் தலைமையிலான அரசை கவிழ்த்து, ராணுவ தளபதி  ஃபடக் அல் பர்ஹன் ஆட்சியை கைப்பற்றினார். இதனை எதிர்த்து சூடான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ராணுவம் அவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவம் ஆட்சியை கைப்பற்றிய நாளில் இருந்து இதுவரை 74 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த நிலையில், தலைநகர் கார்டோம் மற்றும் ஆம்டர்மன் நகரில் ராணுவத்திற்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  அவர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டுகளை வீசிய ராணுவம், துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூவர் உயிரிழந்தனர்.