அசாம் வெள்ளம் பாதிப்பில் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது...

அசாம் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள் நிலையில், மாநிலம் முழுவதும் கனமழையால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 54 லட்சத்தைத் தாண்டியுள்ளது. 

அசாம் வெள்ளம் பாதிப்பில் - உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது...

அசாமில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் மொத்தமுள்ள 36 மாவட்டங்களில் 32 மாவட்டங்கள் வெள்ளக்காடான நிலை உருவாகியுள்ளது. வெள்ளத்தில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து பலர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழப்பதும் மாயமாவதும் கடந்த சில நாட்களாக தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் இன்று மேலும் 12 பேர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர். தொடர்ந்து வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பாதித்தோர் எண்ணிக்கையும் 54 லட்சத்து 57 ஆயிரமாக அதிகரித்துள்ளது.