ஆங் சான் சூகி தனிமைச் சிறையில் அடைப்பு - மியான்மர் ராணுவ ஆட்சிக்குழு தெரிவிப்பு!

ஆங் சான் சூகி, தனிமைச் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவ ஆட்சிக்குழு தெரிவித்துள்ளது.

ஆங் சான் சூகி தனிமைச் சிறையில் அடைப்பு - மியான்மர் ராணுவ ஆட்சிக்குழு தெரிவிப்பு!

ஊழல், இராணுவத்திற்கு எதிராகத் தூண்டுதல், கொரோனா விதிகளை மீறியது மற்றும் தொலைத் தொடர்புச் சட்டத்தை மீறிய குற்றத்திற்காக ஆங் சான் சூகிக்கு, 11 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், அவர் நேபிடாவில் உள்ள சிறை வளாகத்தில் இருந்த ஒரு வீட்டில்தான் காவலில் வைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில், குற்றவியல் சட்டங்களின்படி, தற்போது தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஆங் சான் சூகி மீது இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகளை ராணுவம் பதிவு செய்து, அந்த வழக்குகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.